செய்தி

2027 உலகக் கோப்பைக்கு குறி வைக்கும் ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு

ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில். அவர் வரவிருக்கும் 2027 ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், ரோஹித் சர்மா ஓய்வு பெறவேண்டும் என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வெற்றிபெற்றவுடனே ஓய்வை அறிவித்திருக்கலாம்.

இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி அடுத்ததாக விளையாடவிருக்கும் மிக்பெரிய தொடர் என்றால் உலகக்கோப்பை 2027 தான். ஏற்கனவே, ரோஹித் டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி ஆகியவற்றை இந்திய அணிக்கு வாங்கிக்கொடுத்துவிட்டார். இன்னும் அவருடைய தலைமையில் இந்திய அணி ஒரு நாள் உலகக்கோப்பையை தான் வெல்லவில்லை. எனவே, அதனை வெண்றுவிட்டு ரோஹித் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரசிகர்களும் அவர் ஓய்வு அறிவிக்காதது குறித்து சமூக வலைத்தளங்களில் அவரு கண்ணுல 2027 உலகக்கோப்பை தெரியுது என கூறிக்கொண்டு வருகிறார்கள். இப்படியான சூழலில் ஆஸ்ரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது ரோஹித் சர்மா 2027 உலகக்கோப்பை போட்டியில் விளையாட முடிவு செய்திருப்பதாக பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் ” ரோஹித் சர்மாவிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது தனக்கு ஓய்வு பெறுவதில் எண்ணமில்லை தொடர்ச்சியாக விளையாட விருப்பம் இருக்கிறது என சொல்லியிருந்தார். அதற்கு அர்த்தம் என்னவென்றால், அடுத்ததாக நடைபெறவுள்ள 2027 போட்டியில் விளையாடுவேன் என்பது தான். அவருடைய எண்ணத்திலும் அது தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

ஏனென்றால், கடந்த முறை அதாவது 2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தோல்வி அவருடைய எண்ணத்தில் இருக்கும் என நினைக்கிறேன். எனவே, ஒரு நாள் உலககோப்பையையும் வெற்றிபெற்றுவிட்டு அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைக்கிறேன். இருப்பினும் முடிவு என்பது அவருடைய கையில் தான் இருக்கிறது. திடீரென அவர் விளையாடி பாதியில் கூட ஓய்வு பெற முடிவு செய்யலாம். அவர் எப்படி எப்படி விளையாடி என்னென்ன முடிவுகளை எடுக்கப்போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்” எனவும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

 

(Visited 53 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி