செய்தி

முக்கிய சாதனையை டெஸ்டில் முறியடிக்க போகும் ரோஹித் சர்மா..!

இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரிலும் நடக்கிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் வரலாறு படைக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சாதனையை முறியடிக்க உள்ளார்.

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் விராட் கோலி. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 40 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அதே நேரத்தில், ரோஹித் சர்மா இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையில் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றினால், அசாருதீன் சாதனையை முறியடிப்பார்.

இந்திய அணிக்காக முகமது அசாருதீன் 47 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார். அதில் இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார்.

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற கேப்டன்கள் வரிசையில் 40 வெற்றிகளுடன் முதல் இடத்தில் விராட் கோலி, 27 வெற்றிகளுடன் அடுத்து தோனி, மூன்றாவது இடத்தில் 21 வெற்றிகளுடன் கங்குலி உள்ளனர்.

நான்காவது இடத்தில் 14 வெற்றிகளுடன் அசாரூதின் இருக்கும் நிலையில் அந்த இடத்தை பிடிக்கும் வாய்ப்பு இப்போது ரோகித் சர்மாவுக்கு இருக்கிறது.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி