செய்தி விளையாட்டு

மோசமான கேப்டனாகிய ரோஹித் – 5 இன்னிங்ஸில் வெறும் 31 ரன்கள்

தொடர்ந்து திணறிவரும் ரோகித் சர்மா, பார்டர் கவாஸ்கர் தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற இந்திய அணியை தற்போது 2-1 என்ற மோசமான நிலைமைக்கு எடுத்துவந்ததற்கு காரணமானவர்களில் முக்கியமானவராக ஜொலிக்கிறார்.

எடுக்கும் அத்தனை முடிவுகளும் படுமோசமானதாகவும், சம்மந்தமே இல்லாமல் பிளேயிங் 11 அணியையும், எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பவுலரை எடுத்துவர வேண்டும் என தெரியாமலும், 11வது வீரருக்கு கூட பவுண்டரி லைனில் பீல்டரை நிறுத்தும் ஒரு ஜோக்கர் கேப்டனாக பூஜ்ஜியமாகவே இருந்துவருகிறார் ரோகித் சர்மா.

அவருடைய மோசமான பேட்டிங்கும், படுமோசமான கேப்டன்சியும் இந்தியாவை இறங்குமுகத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது. 12 வருடங்களாக ஆதிக்கம் செலுத்திவந்த இந்தியாவின் கோட்டை ஆஸ்திரேலியாவில் இன்று சரிந்துள்ளது. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழியாக சொந்த மண்ணில் 24 வருடங்களுக்கு பிறகு ஒயிட்வாஷ் ஆனதே தற்போது பின்னால் தீப்பற்ற வைத்ததை போல ஆஸ்திரேலியாவிலும் பரவியுள்ளது.

ஆஸ்திரேலியா அணியே இந்தபோட்டியை வெல்ல முடியாது டிரா மட்டும் தான் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் இருந்தபோது, இல்லை இல்லை நான் உங்களுக்கு வெற்றியை பரிசாக தருகிறேன் என்று தன்னுடைய மோசமான கேப்டன்சி மூலம் ஆஸ்திரேலியாவுக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா.

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக இந்திய கேப்டனாக மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களில் முதல் கேப்டனாக படுமோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

5 இன்னிங்ஸில் வெறும் 6 சராசரி..
இந்திய கேப்டனாக ஜீரோவாக ஜொலித்துவரும் ரோகித் சர்மா, ஒரு பேட்ஸ்மேனாகவும் நம்மை ஆச்சரியப்படுத்துவதில் குறை வைக்கவில்லை. அணிக்குள் வந்து சுப்மன் கில்லை வெளியேற்றியது, தொடக்க வீரராக இருந்த கேஎல் ராகுலை மாற்றியது, களத்திற்கு வந்து சிறிதுநேரத்திற்குள்ளாகவே மீண்டும் பெவிலியனுக்கு சென்று அமர்ந்துகொள்வது, டெய்ல் எண்டர்கள் பவுண்டரி அடிப்பதற்கு கைத்தட்டி கொண்டாடுவது என எதற்கு அணியில் ஒரு பேட்ஸ்மேனாக இருக்கிறோம் என்பதையே மறந்துவிட்ட ரோகித் சர்மா, கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக அணிக்குள் ஒட்டிக்கொண்டுள்ளார்.

இந்த சூழலில் நடந்துவரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு எதிராக 5 இன்னிங்ஸ்களில் 4 முறை அவுட்டாகியிருக்கும் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணி டெஸ்ட் கேப்டனால் அதிகமுறை வெளியேற்றப்பட்டவர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். பாட் கம்மின்ஸ் 6 முறை ரோகித்சர்மாவை இதுவரை வீழ்த்தியுள்ளார். அதில் இந்த தொடரில் மட்டும் 4 முறையாக பதிவாகியுள்ளது.

டெஸ்ட்டில் எதிரணி கேப்டனால் வெளியேற்றப்பட்ட கேப்டன்கள்:

6 – ரோகித் சர்மா (இந்தியா) – பாட் கம்மின்ஸ் (எதிரணி கேப்டன்)
5 – டெட் டெக்ஸ்டர் (இங்கிலாந்து) – ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா)
5 – சுனில் கவாஸ்கர் (இந்தியா) – இம்ரான் கான் (பாகிஸ்தான்)
4 – குலாப்ராய் ராம்சந்த் (இந்தியா) – ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா)
4 – கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ்) – கபில்தேவ் (இந்தியா)
4 – பீட்டர் மே (இங்கிலாந்து) – ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா)

கவுதம் கம்பீர் மற்றும் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா இதுவரை இல்லாத படுமோசமான சாதனைகளை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் சில பட்டியலை பார்க்கலாம்..

படுமோசமான சாதனைகள்:

* நியூசிலாந்துக்கு எதிராக 24 வருடத்திற்கு பிறகு டெஸ்ட் தொடரில் சொந்தமண்ணில் ஒயிட்வாஷ், அதிலும் 2 போட்டிகளுக்கு மேலாக முதல்முறையாக ஒயிட்வாஷ் ஆனது.
* 27 வருடத்திற்கு பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி
* 12 வருடத்திற்கு பிறகு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி
* 46 ரன்னுக்கு சொந்தமண்ணில் ஆல் அவுட்

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி