செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை மூன்று மணி நேரம் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஒக்கூரில் மூன்று மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆவுடையார் கோவிலிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒக்கூர் கிராமத்தில் இன்றுவரை செல்போன் டவர் அமைக்கப்படவில்லை.
அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ள மூரியூர் கிராமத்திலும்,மற்றும் துஞ்சனூர் கிராமத்திலும் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிலிருந்து ஒக்கூர் பகுதிக்கு சிக்னல் கிடைப்பதில்லை. எனவே அங்கு இருக்கின்ற கடைகள், இசேவை மையம்,பள்ளிகள் மற்றும் அலுவலகம், வங்கிகள் உட்பட மாணவர்கள் பயன்படுத்தும் செல்போன் உள்பட அனைத்திற்கும் செல்போன் டவர் கிடைக்காததால் அனைவரும் தினந்தோறும் அல்லல் படுகின்ற சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை மூன்று மணி நேரம் சாலை மறியல் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மு.க.முஜிபூர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
போராட்டம் அறிந்து அங்கு வந்த ஆவுடையார் கோவில் வட்டாட்சியர்மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஆவுடையார் கோவில் காவல் ஆய்வாளர் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் செல்போன் டவர் அமைப்பதற்கு தகுதியான இடத்தேர்வு நடந்து கொண்டிருப்பதாகவும், இடம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பிஎஸ்என்எல் உட்பட அனைத்து செல்போன் டவர்களும் அமைத்து தொடர்ச்சியாக இன்டர்நெட் கனெக்சன் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.