அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

ChatGPT பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – அமெரிக்காவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ChatGPT மீது அமெரிக்காவில் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ChatGPT பயனர்கள் சிலரை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில், இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓபன் ஏ.ஐ., நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், ChatGPT தற்கொலைக்கு தூண்டியதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சமூக வலைத்தளத்தால் பாதிக்கப்பட்டோர் சட்ட மையம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஓபன் ஏ.ஐ., நிறுவனம் ChatGPT எனும் பதிப்பை தகுந்த ஆய்வுகள் இல்லாமல் வெளியிட்டது; இது முட்டாள்தனமாகவும், மனரீதியாக ஒருவர் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் இருப்பதாகவும், அந்நிறுவனத்துக்குள் இருந்தே எச்சரிக்கைகள் எழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அவற்றை பொருட்படுத்தாமல் அந்நிறுவனம் குறித்த தளத்தை வெளியிட்டுள்ளது. இதனால் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அமோரி லேசி எனப்படும் 17 வயதுடைய பெண், உயிரை மாய்த்துக்கொள்ள கயிற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் ChatGPT தெரிவித்துள்ளது.

எனவே, தற்கொலைக்கு தூண்டிய ஓபன் ஏ.ஐ., நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!