ஜெர்மனியில் சிறுவர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து – முக்கிய நடவடிக்கை எடுக்க தீர்மானம்
ஜெர்மனியில் அண்மைக்காலங்களாக சிறார்களின் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள குற்றச் செயல்களில் ஈடுப்படும் சிறுவர்களை தண்டிக்கப்படும் வயது குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிறார்களுக்கு தண்டனை வழங்குகின்ற வயது எல்லையை 12 வயதாக குறைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
ஜெர்மனியில் தற்பொழுது சிறார்களுக்கு தண்டனை வழங்குகின்ற வயதானது 14 வயதில் ஆரம்பமாகின்றது.
இந்நிலையில் 18 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் குற்றங்கள் புரிந்தால் கூட இவர்களுக்கு இளைஞர்களின் சட்டத்தின் படி தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் எதிர் வரும் காலங்களில் சிறார்களுக்கு தண்டனை வழங்குகின்ற வயதை 12 குறைக்க வேண்டும் என ஜெர்மனியின் அதிதீவிர வலது சாரி கட்சியான AFD கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் கோரிக்கை விடுத்துள்ளார்.