ஐரோப்பாவில் எரிவாயு விலை கணிசமாக உயரும் அபாயம்
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள LNG ஆலையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஐரோப்பாவில் எரிவாயு விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
ஐரோப்பாவிற்கு LNG எரிவாயுவை பெரும்பாலும் ஏற்றுமதி செய்யும் ஆலையாக இது கருதப்படுகிறது.
வேலை நிறுத்த எச்சரிக்கையுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவில் எரிவாயு விலை நேற்று சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள மேலும் 02 LNG ஆலைகளும் இந்த வேலைநிறுத்தத்திற்கு தமது ஆதரவைத் தெரிவிக்கத் தயாராக உள்ளதுடன், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
உலகின் 10 வீதமான LNG விநியோகம் இந்த 03 ஆலைகளினால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.