கனடாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம்
கனடாவில் கொவிட் 19, இன்ப்ளூயன்ஸா மற்றும் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதாக கனேடிய சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கனடாவில் விடுமுறை காலப்பகுதி நெருங்கி வரும் நிலையில் பொது மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் மற்றும் விருந்தினர்களைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியவும், நோய் தொற்று பரவலைத் தடுக்கவும் முடிந்த அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மருத்துவ நிபுணர்கள் மக்களை வலியுறுத்தியுள்ளனர.
கொரோனா விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறைந்துவிட்டாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது இன்னும் முக்கியம் என்பதை நாம் நினைவூட்ட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)





