இலங்கை

இலங்கையில் நீர்த்தேக்கங்கள், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்ப்பாசன திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 32,145 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாக அதன் பொறியாளர் ஜி. டபிள்யூ. ஏ. சதுரா தில்தாரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, ஹலவத்தை, ஆராச்சிக்கட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு சதுரா தில்தாரா கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 3,520 கன அடியும், கவுடுல்ல நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும், யான் ஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 6,099 கன அடியும், பராக்கிரம கடலில் இருந்து வினாடிக்கு 5,046 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேவேளை, மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெள்ளத்தில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!