சுவிட்சர்லாந்தில் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம்: மக்கள் அச்சம்
சுவிட்சர்லாந்து மக்கள் நிதி நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு மக்கள் அடுத்த ஆண்டில் தங்களிடம் குறைந்த அளவு பணமே இருக்கும் என கருதுகின்றனர்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் இந்த ஆண்டை விடவும் குறைந்த அளவு பணமே தங்களிடம் இருக்கும் என மக்கள் கருதுகின்றனர்.
சுகாதார காப்பீட்டு கட்டண அதிகரிப்பு, வாடகை தொகை அதிகரிப்பு, அடகு கடன் வட்டி வீத அதிகரிப்பு போன்ற காரணிகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக 4000 முதல் 8000 வரை மாத வருமானம் ஈட்டும் மக்கள் இவ்வாறான பாதிப்புகளை எதிர் நோக்குவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆண்டில் நிதி நெருக்கடி நிலைமைகள் ஏற்படும் என குறிப்பிடத்தக்களவு மக்கள் எதிர்வுகூறியுள்ளனர்.