பிரான்ஸில் சிறுவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பிரான்ஸில் ஆபாசத்தளங்களை பார்வையிடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
18 வயதுக்கு கீழுள்ளவர்கள் ஆபாசத்தளங்களை பார்வையிடுவது தொடர்பில் தொடர்ச்சியாக சட்டங்கள் இறுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், பிரான்ஸில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு சிறுவர்கள் ஆபாச தளங்களை பார்வையிடுவதாக தெரியவந்துள்ளது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 நிமிடங்கள் வரை ஆபாசத்தளங்களில் நேரம் செலவிடுவதாகவும், கடந்த 2022 ஆம் ஆண்டில் 2.2 மில்லியன் சிறுவர்கள் ஆபாச இணையத்தளங்களை பார்வையிடுவதாகவும் தெரியவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 600,000 ஆக இருந்தது. 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்களே அதிகளவில் இணையத்தை பார்வையிடுவதாக தெரியவந்துள்ளது.
(Visited 7 times, 1 visits today)