இந்தியா பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: பிரான்சுடன் கைகோர்க்கும் இந்தியா

இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் மரைன் விமானங்களை வாங்குவதற்கான ரூ.63,000 கோடி மதிப்பிலான மெகா ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கட்கிழமை கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின் போது, இந்தியத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தியது பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இதில் கடற்படை துணைத் தலைவர் அட்மிரல் கே. சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் இந்த மாத தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த ஜெட் விமானங்கள் முதன்மையாக உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்திலிருந்து இயங்கும்.Cc
(Visited 1 times, 1 visits today)