உலகளவில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
உலகளவில் இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோயால் (Colon cancer) பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Lancet Oncology எனும் மருத்துவ இதழ் அந்த ஆய்வை வெளியிட்டிருக்கிறது.
வட அமெரிக்கா, ஐரோப்பா தவிர்த்து உலகளவில் நடுத்தர வருமானம் கொண்ட பகுதிகளில் ஆரம்பக்காலப் பெருங்குடல் புற்றுநோயின் விகிதம் அதிகரிப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
உயர்வருமானம் கொண்ட மேற்கத்திய நாடுகளில் மட்டும் இந்தப் போக்கு இல்லை. இதற்குமுன்னர் இல்லாத தென் அமெரிக்க, ஆசிய நாடுகளிலும் இது காணப்படுவதாக ஆய்வின் முன்னணி ஆசிரியரும் புற்றுநோய் ஆய்வாளருமான Hyuna Sung தெரிவித்தார்.
2013 முதல் 2017ஆம் ஆண்டுவரை 50இல் சுமார் 27 நாடுகளில் இளையர்களிடையே பெருங்குடல் புற்றுநோயின் விகிதம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
புற்றுநோயின் போக்கு அதிகரிப்பதற்கு உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றமே காரணம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த USF இதயச் சுகாதார நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் கூறுகிறார்.
குறிப்பாக அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள். அவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதித்து, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகளைத் தூண்டிவிடும்.
இதனைச் சரிசெய்யநல்ல தூக்கம், சிறந்த உடற்பயிற்சி, இயன்றவரை வீட்டில் சமைத்த உணவு என நம் அன்றாட வாழ்க்கைமுறையில் ஏற்படுத்திக்கொள்ளும் மாற்றங்கள்தான் என்று இணைப் பேராசிரியர் கூறுகிறார்.
ஆனால் உணவு மட்டுமே இந்தப் புற்றுநோய்க்குக் காரணமாகிவிடாதெனவும், சில நேரங்களில் சுற்றுச்சூழல், பரம்பரையாக ஏற்படும் உடல்நலக் கோளாறுகளும் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்துகளை அதிகரிக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது..