ஜெர்மனியில் அதிகரிக்கும் விலைவாசி – ஆடம்பர வாழ்க்கையை தவிர்க்கும் மக்கள்

ஜெர்மனியில் விலைவாசி அதிகரித்து வருவதால் மக்கள் ஆடம்பர செலவுகளை தவிர்த்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உணவு செலவுகள், மின்சாரம், எரிசக்தி விலைகள் அனைத்தும் அதிகரித்துள்ளன. உணவகங்களில் சாப்பிடுவது, உணவை ஓர்டர் செய்வது மற்றும் தள்ளுபடி கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வது கூட விலை உயர்ந்த விடயங்களாகி விட்டன.
உணவுகளை ஆர்டர் செய்வது ஒரு காலத்தில் மலிவு விலையில் இருந்தது. தற்போது பணவீக்கம் காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளதால், பலர் இப்போது உணவை ஓர்டர் செய்வதைத் தவிர்க்கின்றனர்.
இதேவேளை, பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் எளிய சீஸ் ரோலின் விலை இப்போது 4.20 யூரோக்களாக உள்ளது. பேக்கரி உரிமையாளர்கள் தங்கள் வணிகத்தை நடத்த கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதனால், பேக்கரி பொருட்களின் விலை அதிகரித்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், பீட்சா விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 2021இல் ஒரு பீட்சாவின் விலை 6.50 யூரோக்களாக இருந்துள்ளது. இப்போது அதன் விலை 11.50 யூரோக்களாக உள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.