சிங்கப்பூரில் அதிகரிக்கும் வட்டிவிகிதம் – நெருக்கடியில் மக்கள்
சிங்கப்பூரில் வட்டிவிகிதம் அதிகரிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் சிறிய நிறுவனங்கள் கடனைக் கட்டமுடியாமல் சிரமப்படுகின்றன. சில நிறுவனங்கள் மூடவேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று வர்த்தகச் சங்கங்கள் கூறின.
கடனைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகச் சங்கங்கள் குறிப்பிட்டன. COVID-19 நோய்ப்பரவல் நேரத்தில் வட்டிவிகிதம் குறைவாக இருந்தது.
ஆனால் அதன்பிறகு வட்டி, 4 முதல் 13 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால் விநியோகத் தொடர் பாதிக்கப்படலாம்.
அந்த நிறுவனங்களோடு வர்த்தகம் புரியும் மற்ற நிறுவனங்களும் பாதிக்கப்படலாம்.
நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களும் பாதிக்கப்படுவர் என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.
(Visited 3 times, 1 visits today)