ஜப்பானில் உணவு பொருட்களின் விலை உயர்வு – விவசாய அமைச்சர் பதவி விலகல்!

ஜப்பானில் உணவு பொருட்களின் விலைகள் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகின்ற நிலையில், அந்நாட்டின் விவசாய அமைச்சர் பதவி விலகியுள்ளார்.
ஆதரவாளர்களின் பரிசுகளால் “அரிசி வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை” என்று கூறியதன் மூலம் அவர் பொதுமக்களின் எதிர்ப்பை பெற்ற பின்னர் அவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.
டகு எட்டோவின் ராஜினாமா, பிரதமர் ஷிகெரு இஷிபா மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது.
“இப்போதுதான் நான் எனது ராஜினாமாவை பிரதமர் இஷிபாவிடம் சமர்ப்பித்தேன்,” என்று திரு. எட்டோ பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
குடிமக்கள் அரிசி விலைகள் உயர்ந்து வருவதால் அவதிப்படும் நேரத்தில் நான் மிகவும் பொருத்தமற்ற கருத்தை தெரிவித்தேன்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 4 times, 4 visits today)