ஜெர்மனியில் அதிகரிக்கும் உணவு விலைகள் – கவலையில் மக்கள்

ஜெர்மனியில் இந்த ஆண்டு உணவு விலைகள் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
ஆண்டின் தொடக்கத்தில் பணவீக்கம் குறைந்தாலும், உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அத்துடன், ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் ஏற்படும் மாற்றங்கள் செலவுகளையும் பாதிக்கலாம்.
கடந்த ஆண்டு வெண்ணெய் போன்ற சில பொருட்களின் விலைகள் மிக அதிகமாக இருந்தன. தற்போது அவை சிறியளவில் குறைந்துள்ளன.
எனினும், ஜெர்மனியில் உணவு விலைகள் நிலையற்றதாகவே உள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டு வாழ்க்கை செலவுகள் மீண்டும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வெண்ணெய் மற்றும் பழச்சாறுகள் ஆகியவை மிகப்பெரிய விலை உயர்வைக் கொண்ட பொருட்களில் அடங்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விலை உயர்வு தொடர்பான சரியான விலையை கணிக்க முடியாவிட்டாலும், உணவு விலைகள் உயர்வடையும் என்றும், இது பல குடும்பங்களுக்கு நிதிச்சுமையாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.