அமெரிக்காவில் அதிகரிக்கும் முட்டை விலை – வாடகைக்கு கோழிகள் வாங்க அனுமதி

அமெரிக்காவில் முட்டை விலை தொடர்ந்து உயருடும் நிலையில் முட்டையிடும் கோழிகளை வாடகைக்கு எடுக்கலாம் என அறிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் “Rent The Chicken” என்ற அந்தச் சேவை முதன்முதலில் சுமார் 10 ஆண்டுக்கு முன்பு பென்சில்வேனியா மாநிலத்தில் தொடங்கியது.
இப்போது அது 40க்கும் அதிகமான நகரங்களில் உள்ளது. அண்மை மாதங்களில் அந்தச் சேவையை நாடுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது.
அது வழக்கமான விலையைப் போல் 3 மடங்காகும். வீட்டில் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்ப்பதும் மலிவல்ல என கூறப்படுகின்றது.
ஆனால் பேரங்காடிகளில் விற்கப்படும் முட்டைகளைவிட அவற்றின் தரம் அதிகம் என்று கூறப்படுகிறது.
கோழிகளை 6 மாதத்திற்கு வாடகைக்கு எடுக்க பல நூறு டொலர்கள் செலாகும். கோழிகளுக்குத் தேவையான உணவு, தங்கும் கூண்டு உள்ளிட்ட அனைத்தும் கொடுக்கப்படும்.
இரு கோழிகள் வாரத்திற்கு 14 முட்டைகள் கொடுக்கலாம்.