பாகிஸ்தானில் அதிகரிக்கும் காற்று மாசுப்பாடு : முழுமையான பூட்டுதலுக்கு தயாராகுமாறு எச்சரிக்கை!
பாகிஸ்தானின் கலாச்சார தலைநகரான லாகூரில் அதிக காற்று மாசுபாடு காரணமாக ஏராளமான மக்கள் வைத்தியசாலைகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குடியிருப்பாளர்கள் முகமூடிகளை அணியத் தவறினால், அல்லது புகைமூட்டம் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள பிற வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் முழுமையான பூட்டுதல் உடனடியாக எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
14 மில்லியன் மக்கள்தொகை கொண்ட லாகூரில் தெருக்களில் வசிப்பவர்கள் முகமூடியின்றி பெருமளவில் காணப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் இருமல் இருப்பதாக அல்லது தங்கள் கண்கள் எரிவதை உணர்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“ஒரு வாரத்தில் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் சிகிச்சை பெற்றனர்” என்று பாகிஸ்தான் மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் சல்மான் காஸ்மி கூறியுள்ளார்.