இந்த ஆண்டு பணவீக்கத்தை பாதியாகக் குறைக்கும் இலக்கை இழக்க நேரிடும் – ரிஷி சுனக் எச்சரிக்கை!
இங்கிலாந்தின் முன்னணி பொருளாதார முன்னறிவிப்பாளர்களில் ஒருவரும், தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக், இந்த ஆண்டு பணவீக்கத்தை பாதியாகக் குறைக்கும் இலக்கை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனம் (NIESR) உணவு மற்றும் பிற அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதால், இந்த ஆண்டு முழுவதும் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் எனக் கூறியுள்ளது.
இந்நிலையில், முன்னதாக பிரதமர் ரிஷி சுனக் 2023 இல் பணவீக்கத்தை பாதியாகக் குறைக்கப்போவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி பார்க்கும் போது பணவீக்கம் முன்பு இருந்ததை விட இரட்டிப்பாகியுள்ளது.
இந்த மதிப்பீட்டானது அரசாங்கத்தின் சுயாதீன பொருளாதார முன்னறிவிப்பாளரான பட்ஜெட் பொறுப்புக்கான அலுவலகத்தால் செய்யப்பட்ட மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது. இது 2.9% வீழ்ச்சியைக் கணித்துள்ளது. இதனையடுத்து பிரதமர் ரிஷி சுனக்கின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.