தேர்தல் தோல்வி: டோரி தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக்

பிரித்தானிய பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி லேபர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
லேபர் கட்சி தொடர்ந்து அதிக இடங்களை கைப்பற்றி வருகிறது, தற்போது வரை 412 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ரிஷி சுனக் கன்சவேட்டிவ் கட்சியின் தலைமை பொறுப்பை துறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தேர்தலில் கட்சியின் மோசமான தோல்வியின் பின்னரே அவர் இதனை அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்திற்கு வெளியேஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ள அவர் நான் உங்களின் சீற்றத்தை செவிமடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் புதிய தலைவர் யார் என்பது தீர்மானிக்கப்பட்டதும் தலைமை பதவியை இராஜினாமாசெய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் ஐக்கிய இராச்சியமே மிகச்சிறந்த நாடு எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் மாறவேண்டும் என மக்கள் தெளிவான சமிக்ஞையை வழங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.