ஐரோப்பா

பேனாவால் புதிய சர்ச்சையில் சிக்கிய ரிஷி சுனக்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அரசு கோப்புகளில் கையெழுத்திட பயன்படுத்திய பேனாவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் எளிதில் அழிக்கக் கூடிய மையைக் கொண்ட பேனாக்களை (Erasable ink pen) பயன்படுத்துகிறார் என தெரியவந்துள்ளது.

பிரதமர் ரிஷி சுனக் இப்படியான பேனாவை பயன்படுத்தியதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய மதிப்பில் 4.75 பவுண்டுக்கும் கிடைக்கும் `பைலட் வி (Pilot V)’ ஃபவுன்டைன் பேனாவைப் பயன்படுத்தி பிரதமர் ரிஷி அமைச்சரவைக் குறிப்புகள், அரசாங்க ஆவணங்கள், சர்வதேச உச்சி மாநாட்டில் உத்தியோகபூர்வ கடிதங்கள் போன்றவற்றில் கையொப்பமிடுகிறார்.

ரிஷி, நிதியமைச்சராக இருந்தபோதும், இப்போது பிரதமராக இருந்தபோதும் இந்தப் பேனாவை பயன்படுத்தினார் என்று பைலட் வி பேனா நிறுவனம் அந்த செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளது.

எளிதில் அழிக்கக் கூடிய மையைக் கொண்ட பேனாக்கள் மூலம் கையொப்பமிடுவதால் ரகசிய ஆவணங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுவதாக இங்கிலாந்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இதுதொடர்பாக பேசியுள்ள பிரதமர் அலுவலக செய்திதொடர்பாளர், “சிவில் சர்வீஸ் துறையால் இந்தப் பேனா வழங்கப்பட்டது.

எப்போதாவது மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. ஒருபோதும் தான் எழுதியதை அழித்து திருத்த பிரதமர் ரிஷி சுனக் இந்த பேனாவை பயன்படுத்தியதில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!