புதிய சர்ச்சையில் சிக்கிய ரிஷி சுனக்!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார்.
அதாவது ரிஷி சுனக் Pilot V” fountain என்ற பேனையை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த பேனையானது, எழுதிய சிலமணி நேரங்களில் அழியக்கூடிய தன்மையை கொண்டுள்ளது.
இந்த பேனையை பயன்படுத்தி அவர் ஆவணங்களில் கையெழுத்திட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த விடயத்தை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர், “இது சிவில் சேவையால் வழங்கப்பட்ட மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பேனை எனவும் பிரதமர் அழித்தல் செயல்பாட்டை மேற்கொள்ளும் பேனையை ஒருபோதும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)