செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸர் தான் பெரிய ஹைலைட் விஷயமாகவும் மாறியிருக்கிறது.

பொதுவாகவே ரிஷப் பண்ட்டை பொறுத்தவரையில் மற்ற வீரர்களை விடத் தனித்துவமான முறையில் சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவர் என்றே சொல்லலாம். அவர் விளாசும் சிசிக்ஸரை பார்க்கும்போதே யார்ரா இந்த பையன் என்கிற அளவுக்கு நமக்கு யோசனை வந்துவிடும். குறிப்பாக, அவர் ஒற்ற கையில் விளாசும் சிக்ஸருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றே சொல்லலாம்.

அந்த மாதிரி அதிரடியான சிக்ஸர்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்டை சிக்ஸர் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், எதிர்பார்த்ததை போல அந்த ஷர்ட்டை மிஞ்சும் அளவுக்கு வித்தியாசமான ஒரு சிக்ஸரை விளாசி ரிஷப் பண்ட் அசத்தியுள்ளார்.

பேட் கம்மின்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட ரிஷப் பண்ட் அதனை மடக்கி தன்னுடைய ஸ்டைலில் பின்புறம் விளாசினார். எப்போதுமே கீழே விழுந்து அந்த பகுதியில் அவர் சிக்ஸர் விளாசி பார்த்திருக்கிறோம். இந்த முறை வழக்கத்தை விட இன்னும் கீழே விழுந்து பந்தை சிக்ஸர் விளாசியதைப் பார்க்கும்போது இப்படியெல்லாம் ஒரு வீரர் சிக்ஸர் விளாச முடியுமா? என யோசிக்க வைத்தது.

அந்த அளவுக்கு அற்புதமான மிரட்டல் சிக்ஸரை ரிஷப் பண்ட் இந்த போட்டியில் விளாசியிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்கிஸில் ரிஷப் பண்ட் 78 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி