ஏதென்ஸில் வெடித்த கலவரம் – 21 கார்கள் தீக்கிரை!

ஏதென்ஸில் பொலிஸாருக்கும் கலககாரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிவந்துள்ள அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நள்ளிரவுக்குப் பிறகு கலவரம் வெடிப்பதைக் காட்டியுள்ளது.
எக்சார்ச்சியாவில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே சுமார் 50 பேர் பெட்ரோல் குண்டுகள் மற்றும் பட்டாசுகளை அதிகாரிகள் மீது வீசியுள்ளனர்.
இந்த கலவரத்தில் 21 கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அச்சமடைந்த குடியிருப்பாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது வீடுகள் மற்றும் கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
(Visited 19 times, 1 visits today)