தாய்லாந்து சிறையில் ஏற்பட்ட கலவரம் : ஒருவர் பலி, பலர் படுகாயம்!
தாய்லாந்தில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் கைதி ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உதைப்பந்தாட்ட போட்டியில் கைதிகள் பங்குபற்றியபோது இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கைதி ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த 12 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஐந்து ஆம்புலன்ஸ்கள் வந்ததாக பட்டானி காவல் நிலையத்தின் கண்காணிப்பாளர் போலீஸ் கர்னல் ஜெஃப்ரி சைமன்குன் தெரிவித்தார்.
இறந்த கைதி மண்டலம் 1 ஐச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.





