ஜப்பானில் வரலாறு காணாத வெப்பத்தால் உச்சத்தை எட்டிய அரிசி விலை

ஜப்பானில் வரலாறு காணாத வெப்பத்தால் அரிசி விலை உச்சத்தை எட்டியுள்ளது.
அரிசி விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் அதை வாங்கிக் குவிக்கின்றனர்.
எனவே, அதனைச் சமாளிக்க ஜப்பானிய அரசாங்கம் அவசர இருப்பிலிருந்து 210,000 டன் அரிசியைச் சந்தைக்குக் கொண்டுவரவிருக்கிறது.
கடந்த சில மாதங்களாய் அரிசியின் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. அது மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது.
அதனால் அவசர இருப்பிலிருந்து அரிசியைச் சந்தைக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 5 கிலோகிராம் அரிசியின் சராசரி விலை 24 டொலர் என்று அரசாங்கம் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அது 13 டொலராக இருந்தது.
(Visited 22 times, 1 visits today)