இலங்கையில் தகவல் வழங்கினால் சன்மானம் அதிகரிப்பு

இலங்கையில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் குறித்து தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்க பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைகுண்டுகள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படுகிறது.
அண்மையில், பதிவான குற்றங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தனியார் துப்பறியும் நபர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த பொலிஸ் சன்மானம் வழங்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தொகையை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
(Visited 33 times, 1 visits today)