இலங்கையில் மின் கட்டணத்தில் திருத்தம் : ஜனவரி முதல் வரவுள்ள மாற்றம்!
இலங்கை மின்சார சபை மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் இவ்வருடத்தில் இரு முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்று தொடர்ந்து மின்சாரம் வழங்குவதன் மூலம் மின்சார சபை நஷ்டம் அடைவதாகவும் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டாலும் எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணத்தை நிச்சயமாக அதிகரிக்க வேண்டியிருக்கும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





