காசா தாக்குதலில் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் மற்றும் AP செய்தியாளர்கள் ‘இலக்கு’அல்ல : இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர்

காஸா மருத்துவமனை மேல் நடத்தப்பட்ட தாக்குதலின்போது உயிரிழந்த இரண்டு செய்தியாளர்கள்மீது குறிவைக்கவில்லை என்று இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைமீது தாக்குதல் நடத்துவதற்கான தீர்மானம் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்த கூடுதல் விசாரணைக்கு ராணுவத் தலைவர் உத்தரவிட்டிருப்பதாகவும் பேச்சாளர் சொன்னார்.
இம்மாதம் 25ஆம் தேதி காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனைமீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 2 செய்தி செய்தியாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
அந்த இரண்டு செய்தியாளர்களும் ராய்ட்டர்ஸ், அஸ்ஸோசியெடட் பிரெஸ் (AP), அல் ஜசீரா ஆகியவை உள்ளிட்ட செய்தி நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர்கள்.
“ராய்ட்டர்ஸ், ஏபி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் எங்கள் தாக்குதலின் குறியல்ல என்பதை உறுதியுடன் சொல்ல முடியும்,” என்று ராய்ட்டர்ஸிடம் ராணுவப் பேச்சாளர் லெஃப்டிணன்ட் கர்னல் நாடாவ் ஷோஷானி கூறினார்.
தாக்குதலில் மேலும் மூன்று செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்.
காஸா போரின்போது நாசர் மருத்துவமனையின் காட்சிகளை சொந்த கேமராக் கருவிகளைக் கொண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அடிக்கடி ஒளிபரப்பியது.
கடந்த சில வாரங்களாக, தாக்கப்பட்ட மருத்துவமனையின் நிலை குறித்த காணொளிகளை ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பியது.