அமெரிக்காவில் 28 வயதில் பணியிலிருந்து ஓய்வு – மகிழ்ச்சியாக வாழ இளைஞர் எடுத்த தீர்மானம்

அமெரிக்காவின் புளோரிடாவில் 28 வயதில் பணியிலிருந்து அமெரிக்க இளைஞர் ஒருவர் ஓய்வு பெற்றுள்ளார்.
பென்சகோலாவில் வசிக்கும் பேரெல்லி என்ற இளைஞர், 30 வயதுக்குள் தனது நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார்.
2020ஆம் ஆண்டு, கொரொனா காலத்தில் வீட்டுக்கு செவிலியர்களை அனுப்பி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ரீவைடலைஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
அவர், 2023ஆம் ஆண்டு தனது 28வது வயதில் 106 கோடி ரூபாய்க்கு அதனை விற்றுள்ளார்.
தற்போது 120 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், பங்குகள், ரியல் எஸ்டேட், கிரிப்டோ கரன்சிகளில் கணிசமான பணத்தை முதலீடு செய்துள்ளார்.
மாதம் சுமார் 26 லட்சம் ரூபாய் வட்டி வருமானத்துடன் அவர் தனது ஓய்வுக்காலத்தை கழித்து வருகிறார்.
(Visited 44 times, 1 visits today)