பதிலுக்குப் பதில் வரி – அமெரிக்க ஜனாதிபதியின் செயலால் நெருக்கடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிலுக்குப் பதில் வரிகளைச் செயல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்.
புதிய தீர்வை அமெரிக்காவின் எதிரிகளையும் நண்பர்களையும் பாதிக்கும். நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு நியாயமான பதில் நடவடிக்கை என்று அந்த உத்தரவு சொல்லப்படுகிறது. தீர்வை உடனே நடைமுறைக்கு வராது.
டிரம்ப்பின் பொருளாதார அதிகாரிகள் வர்த்தக உறவுகளை ஆராய்ந்து எவ்வளவு வரி விதிக்கலாம் என்று கணக்குப் போடத் தொடங்குவர். ஏப்ரல் முதல் திகதிக்குள் கணக்கு முடியும் என்று கணக்கிடப்படுகிறது.
நியாயமற்ற வரிகளை விதிப்பதில் எதிரிகளைவிடப் பெரும்பாலும் நண்பர்களே மோசமாக நடந்து கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, ஜப்பான், தென்கொரியா, ஐரோப்பிய ஒன்றியம் என்று பல தரப்பும் புதிய வரிக்கு இலக்காகலாம் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகளை மேற்கோள்காட்டும் தகவல்கள் கூறுகின்றன.