ஐரோப்பா

ட்ரம்புக்கு பதிலடி : அமெரிக்கா மீது வரி விதிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில், நேற்று ஐரோப்பிய நாடுகளின் பிரிதிநிதிகள் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது அமெரிக்கா மீது €93 பில்லியன் வரிகளை விதிக்கவும், அமெரிக்க நிறுவனங்களை அதன் சந்தையில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் வரை, பிப்ரவரி 1 முதல் 10 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்றும், குறித்த வரியானது ஜூன் 1 முதல் 25 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேட்டோ நட்பு நாடுகள் மீது இவ்வாறு வரி விதிப்பது தவறு என இங்கிலாந்து பிரதமர் கடுமையாக எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!