வட அமெரிக்கா

அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகளுக்கு நீக்கப்படும் கட்டுபாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் COVID-19 பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளார்.

அமெரிக்காவுக்குச் செல்லும் அனைத்துலகப் பயணிகள் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருப்பது அவசியமில்லை.

அது மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் பொதுச் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் பொருந்தும். நடைமுறை நாளை மறுநாள் நடப்புக்கு வருகின்றது.

2021-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அரசாங்க ஊழியர்கள் சுமார் 3.5 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது.

ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகள் தடுப்பூசிச் சான்றிதழையும் கிருமித்தொற்று இல்லை என்று குறிப்பிடும் ஆவணங்களையும் காட்டத் தேவையில்லை.

மெக்சிகோ குடியேறிகளுக்கு எதிரான Title 42 எனப்படும் COVID-19 கட்டுப்பாடுகளும் மீட்டுக்கொள்ளப்படவுள்ளன.

2020ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் குடியேறிகளை உடனடியாக மெக்சிகோவுக்கு நாடு கடத்த வகைசெய்தது.

கட்டுப்பாடுகள் நாளை (11 மே) மீட்டுக்கொள்ளப்படும்போது அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சிகள் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் எண்ணுகின்றனர்.

அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் தற்போது அதிகப் பாதுகாப்பு போடப்படுகிறது. ஏற்கெனவே நூற்றுக்கணக்கான குடியேறிகள் எல்லைப்பகுதியில் கூடியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

 

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்