இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் Instagramஇல் அமுலாகும் கட்டுப்பாடு
Instagram கணக்குகளைப் பயன்படுத்தும் பதின்ம வயதினரின் பெற்றோருக்கு கடுமையான கட்டுப்பாட்டை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நேற்று முதல் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தன் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான ஒரு முறையாக இதை அறிமுகப்படுத்துவதாக மெட்டா நிறுவனம் கூறுகிறது.
ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், மூத்த மெட்டா நிர்வாகி சர் நிக் கிளெக், நாங்கள் இந்த முறைகளை அறிமுகப்படுத்தினாலும், பெற்றோர்கள் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தத் தூண்டுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.





