நிம்மதியற்ற உறக்கம் – அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில், தனது உடல்நலம் குறித்த கவலைகளை, குறிப்பாக காயமடைந்த கைகள் மற்றும் கணுக்கால் வீக்கம் குறித்து எடுத்துரைத்துள்ளார்.
அவர் தனது காயமடைந்த கைகளுக்கு வைத்தியர்கள் பரிந்துரைத்ததைவிட ஆஸ்பிரின் (325 மி.கி) டோஸை அதிகளவில் எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்.
79 வயதான ட்ரம்ப் கண்களை மூடும்போது கூட நிதானமாக இருப்பதாகவும், இரவில் தாமதமாக உதவியாளரை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது அதிகளவிலான துரித உணவுகளை எடுத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், உடற்பயிற்சியை தவரவிட்டுள்ளதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவர்களும் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





