ஜெர்மனியில் கடும் நெருக்கடியில் உணவகங்கள் – வங்குரோத்தடையும் அபாயம்
ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலங்களில் உணவகங்களானது பாரியளவு வருமானத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பல 100க் கணக்கான உணவகங்கள் வங்குரோத்து நிலையை அடைய கூடிய அபாயமும் காணப்பட்டு இருந்தது.
இதன் காரணத்தினால் ஜெர்மன் அரசாங்கமானது மேலதிக வரியை 19 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைத்து இருந்தது. இவ்வாறு 7 சதவீதமாக குறைப்பதன் மூலம் இந்த உணவகங்கள் ஓரளவு வருமானத்தை ஈட்டக் கூடியதாக இருந்தது.
இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கத்துக்கு வருடம் ஒன்றுக்கு மேலதிக வரியை குறைத்த காரணத்தினால் 3.4 மில்லியன் யுரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இந்த மேலதிக வரியை 19 சதவீதமாக உயர்த்துவதற்கு ஜெர்மன் பாராளுமன்றத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
(Visited 7 times, 1 visits today)