கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு பிரிவினர் செயற்பட்டுள்ளனர்.
நேற்று (08) பிற்பகல் அங்கு ஏற்பட்ட கடும் அமைதியின்மையே அதற்குக் காரணம் ஆகும்.
விமான நிலைய சேவைக்காக 100 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் 50 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது.
பொறுப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் நேரடிக் கண்காணிப்பில் இந்த நேர்முகத்தேர்வு இடம்பெற்றிருந்தது.
நேர்முகத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தவிர்த்து பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்களை மட்டும் பணியமர்த்துமாறுவிமான நிலைய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
10 முதல் 15 லட்சம் வரை வேலை வாய்ப்புகள் விற்கப்படுவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.