அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையிலான 1,000 அடி நீளமுள்ள சுரங்கபாதைக்கு சீல் வைக்க தீர்மானம்!
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையிலான 1,000 அடி நீளமுள்ள ஒரு ரகசிய சுரங்கப்பாதைக்கு சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸில் உள்ள புயல் வடிகால் அமைப்பை ஆய்வு செய்த பிறகு, அதன் முகவர்கள் ஒரு முழுமையான சுரங்கப்பாதையை கண்டுப்பிடித்தள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த சுரங்கப்பாதை மெக்சிகன் நகரமான சியுடாட் ஜுவாரெஸுக்கும் அமெரிக்க நகரமான எல் பாசோவிற்கும் இடையில் இயங்குகிறது.
இவை ரியோ கிராண்டே மற்றும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையால் பிரிக்கப்படுகின்றன.
சியுடாட் ஜுவாரெஸின் இராணுவப் படையின் தளபதி ஜெனரல் ஜோஸ் லெமஸ் மெக்சிகன் அதிகாரிகள் 1,000 அடி நீளமுள்ள சுரங்கப்பாதையை சீல் வைப்பார்கள் என்று கூறியதாக CBS செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 10 ஆம் தேதி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதையை கட்ட “நீண்ட நேரம் எடுத்திருக்க வேண்டும்” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.