இறக்குமதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம்!
2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் வாகனங்கள் தவிர இறக்குமதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசித்துள்ளதாக நிதி அமைச்சகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கோப் குழு நேற்று (05.09) கூடிய நிலையில், இதன் முன் முன்னிலையான அதிகாரிகள் மேற்படி தெரிவித்துள்ளனர்.
இதன்போது கோதுமை மா மற்றும் ஓடு தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்திய இரட்டைக் கொள்கைகளை கவனத்தில் கொண்டு எவ்வளவு காலம் இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று பொது நிதிக் குழு (COPF) கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள் மேற்படி கூறியுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





