அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க தீர்மானம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் 100% வரி விதிப்பதாக கூறியுள்ளார்.
ட்ரூத் சோஷியல் என்ற பதிவில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சர்வதேச போட்டிக்கு அமெரிக்க திரைப்படத் தயாரிப்பு தளத்தை இழந்து வருவதாகக் கூறியுள்ள ட்ரம்ப் “ஒரு குழந்தையிலிருந்து மிட்டாய் திருடுவது போல, எங்கள் திரைப்படத் தயாரிப்பு வணிகம் அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளால் திருடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரி எப்போது அல்லது எப்படி விதிக்கப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த வரியை விதித்தால், ஒரு சேவைக்கு வரி விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)





