இலங்கை

வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களின் நெகிழ்ச்சி செயல்!

கொரியாவில் எதிர்பாராத விபத்திற்கு முகங்கொடுத்த கொரிய பிரஜை ஒருவரின் உயிரைக் காப்பாற்ற இலங்கை இளைஞர்கள் குழுவொன்று தீவிர முயற்சி எடுத்துள்ளது.

இலங்கையர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொரியாவில் பணிபுரியும் இலங்கையர் ஒருவரின் சிகிச்சைக்காக பணம் திரட்டும் நோக்கில் இந்த கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தென்கொரியாவின் நோக்ஸான் மைதானத்தில் இலங்கைத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்திருந்த போட்டியின் போது, ​​அருகில் நின்றிருந்த லொறியில் கைத்தொழில் வேலைக்காக வந்த கொரியர் நாட்டவரின் தலை திடீரென லொறியின் முன் பகுதியில் மாட்டிக்கொண்டது.

விரைந்து செயற்பட்ட இலங்கையர்கள், கொரிய அவசர சேவையுடன் இணைந்து, விபத்தில் சிக்கிய கொரியரின் உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் காட்டும் காணொளித் தொடர் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது.

காப்பாற்றப்பட்ட கொரிய பிரஜையை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!