அரசியல் இலங்கை செய்தி

மீள்குடியேற்றம்: மஹிந்தவிடம் பாடம் கற்குமாறு நாமல் அழைப்பு!

” வடக்கில் பெருமளவான மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் இருந்தனர்.

போர் முடிவடைந்த பின்னர் அவர்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் இதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.

“ அபாய வலயங்களில் வீடுகள் உள்ளன. அங்குள்ள மக்களை தற்காலிக இருப்பிடங்களுக்கு அனுப்ப வேண்டும்.

அதன்பின்னர் மாற்று காணிகள் தேடப்பட வேண்டும்.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலப்பகுதியில் மீள் குடியமர்த்துவதற்குரிய பொறிமுறை அன்று இயங்கியது.

சுனாமி அனர்த்தத்தின் பின்னரும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் இருந்து அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் தலைவர்களிடம் அனுபவங்களைப் பெற வேண்டும்.

பேரிடர் இழப்பு தொடர்பில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறியவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறு கோரியுள்ளோம்.

அதன்மூலம் உண்மை தெரியவரும்.

அதேபோல பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை நாம் கண்காணிப்போம்.

இது தொடர்பான எமது கடப்பாட்டை உரிய வகையில் நிறைவேற்றுவோம்.” எனவும் நாமல் ராஜபக்ச எம்.பி. குறிப்பிட்டார்.

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!