இந்தியா

‘bank.in’ என்ற பிரத்யேக இணைய டொமைனை அறிமுகப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கி!

இந்திய வங்கிகள் விரைவில் ‘bank.in’ என்ற பிரத்யேக இணைய டொமைனைக் கொண்டிருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று (07.02) அறிவித்துள்ளது.

நிதி மோசடியைத் தடுக்கவும் ஆன்லைன் நிதிப் பாதுகாப்பை மேலும் வலுவானதாக மாற்றவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டின் கடைசி இருமாத நாணயக் கொள்கையை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ‘bank.in’-க்கான பதிவுகள் ஏப்ரல் 2025 முதல் தொடங்கும் என்றும், தொடர்ந்து ‘fin.in’ அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

நிதித்துறையில் நம்பிக்கையை அதிகரிப்பதே இந்த முடிவு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

அத்துடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் மோசடி சம்பவங்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

“இதை எதிர்த்துப் போராட, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்திய வங்கிகளுக்கு ‘bank.in’ பிரத்யேக இணைய டொமைனை அறிமுகப்படுத்துகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே