டைனோசர்களின் அழிவு தொடர்பில் புதிய தகவல்களை வெளியிட்ட ஆய்வாளர்கள்!
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாபெரும் சிறுகோள் பூமியில் மோதியதில் டைனோசர்கள் அழிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இந்த பெரிய சிறுகோள் தனியாக இல்லை என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ஹெரியட் வாட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அதே ஆண்டில் இரண்டாவது பேரழிவு தரும் விண்வெளிப் பாறை பூமியில் மோதியதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இரண்டாவது சிறுகோள் சுமார் 1,640 அடி (500 மீட்டர்) அகலம் கொண்டது. இந்த பாறை கென்யா குடியரசின் கடற்கரை பகுதியில் பூமியை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் நிக்கல்சனும் அவரது குழுவினரும் அட்லாண்டிக் பெருங்கடலின் கடற்பரப்பில் நில அதிர்வு பிரதிபலிப்புத் தரவுகளைப் படித்துக்கொண்டிருந்தபோது, இந்த இரண்டாவது சிறுகோள் பற்றிய முதல் ஆதாரம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பாறை விழுந்த இடம் மற்றும் அதன் பள்ளங்களை வைத்து சிறிய சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போது, புதிய உயர்-தெளிவு, 3D நில அதிர்வு படங்களை எடுத்துள்ளனர், இது அவர்களின் சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த பள்ளம் நாடிர் பள்ளம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கியபோது இது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.