புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஆய்வாளர்கள்!
மெல்போர்னில் உள்ள RMIT பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் சிகிச்சைகளுக்கு நம்பிக்கையளிக்கும் சிறிய ‘நானோடோட்களை’ (nanodots) உருவாக்கியுள்ளனர்.
மொலிப்டினம் ஆக்சைடில் (molybdenum oxide) இருந்து பெறப்பட்ட இந்த உலோகத் துகள்கள், புற்றுநோய் செல்களை அவற்றின் அழுத்த அளவை அதிகரிப்பதன் மூலம் தேர்ந்தெடுத்து அடையாளம் கண்டு அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
நானோடோட்கள் ‘ (nanodots)புற்றுநோய் செல்களில் அப்போப்டோசிஸைத் (apoptosis) தூண்டும் எதிர்வினை ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை வெளியிடுகின்றன.
அதே நேரத்தில் ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நானோடோட்கள்’ (nanodots) 24 மணி நேரத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் செல்களை மூன்று மடங்கு வேகத்தில் அழித்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





