இந்தியா

சிரியாவில் இருந்து இந்தியர்கள் மீட்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அசாதாரண சூழல் நிலவும் சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, லெபனான் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்டவர்களில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 44 ஜைரீன்கள் அடங்குவர். இவர்கள் சைதா ஜைனாபில் சிக்கியிருந்தனர்.

சிரியாவில் சிக்கித் தவித்த இந்தியர்களின் கோரிக்கைகள் மற்றும் அங்குள்ள பாதுகாப்பு நிலைமை குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் இணைந்து இந்த மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 75 பேர் மீட்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் சில இந்தியர்கள் சிரியாவில் உள்ளனர். அவர்கள் டமாஸ்கசில் உள்ள தூதரகத்துடன் +963 993385973 என்ற உதவி எண்ணிலும், வாட்ஸ்அப்பிலும், மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!