இத்தாலியில் சுற்றுலா பயணிகளின் வருகையை நிறுத்துமாறு கோரிக்கை!
இத்தாலியின் மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றான காப்ரியன் பகுதியில் நீர் குறித்த அவசர நிலை எழுந்துள்ளது.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நிறுத்த உத்தரவிடுமாறு நகர நிர்வாகம் கோரியுள்ளது.
நீர் விநியோகம் இல்லாமல், சுற்றுலாப் பருவத்தில் தினசரி தீவுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று மேயர் பாலோ ஃபால்கோ கூறியுள்ளார்.
இதனையடுத்தே இந்த உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகப்பகுதியில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக கூறப்படுகிறது.





