கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்குமாறு கோரிக்கை!
பொருளாதார திட்டங்களை மேம்படுத்த மக்கள் கொழும்பில் உள்ள பெறுதியான காணிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சினமண்ட் கிரான்ட் ஹோட்டலில் இன்று (05.08) முற்பகல் இடம்பெற்ற கட்டிடக் கலைஞர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் வீட்டுத் திட்டங்களை நகருக்கு வெளியே நிர்மாணித்து, நகரத்தில் பெறுமதியான காணிகளை முதலீட்டிற்காக வழங்கினால், நாட்டின் பொருளாதாரம் உயர் நன்மைகளை அடைய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் திட்டங்களும் உள்ளதாக தெரிவித்த அவர், முறையான நகர திட்டமிடல் மூலம் ஒவ்வொரு நகரத்தையும் அழகான நகரமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் எனவும் அதற்காக புதிய சட்டத்தை கொண்டு வரவும் நாங்கள் உழைத்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த நகர மேம்பாட்டு பணிகளுக்கு குறைந்தபட்சம் 10,000 பொறியாளர்கள் தேவை. மேலும், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள். நிபுணர்கள் தேவை.” “எதிர்காலத்தில், நாட்டிலும், வெளிநாட்டிலும் கட்டிடக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.