தென்கொரியாவின் முன்னாள் அதிபரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை!
பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் யோலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு தென் கொரிய நீதிமன்றத்தை புலனாய்வாளர்கள் கோரியுள்ளனர்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரை விசாரிக்க விரும்புவதாக குற்றவியல் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
டிசம்பவர் 03 ஆம் திகதி சிலமணி நேரங்களே நீட்டித்த சர்ச்சைக்குரிய சட்டத்தை அமுற்படுத்தியதை தொடர்ந்து தென்கொரியாவல் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து யூன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
யூன் விசாரணைக்கு ஆஜராவதற்கான பல கோரிக்கைகளைத் தவிர்த்தார் மற்றும் அவரது அலுவலகங்களைத் தேடுவதையும் தடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் தேசத்துரோகம் என்று குற்றம் சாட்டப்பட்டால் குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுபட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)